59வது நாளாக போராட்டம்: அரசுக்கு சி.ஐ.டி.யு., கண்டனம்
59வது நாளாக போராட்டம்: அரசுக்கு சி.ஐ.டி.யு., கண்டனம்
ADDED : அக் 16, 2025 02:11 AM
சென்னை: கோரிக்கைகள் வலியுறுத்தி, 58வது நாளாக, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசுக்கு சி.ஐ.டி.யு., கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலர் கண்ணன் அளித்த பேட்டி:
போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களின் நியமன கோரிக்கைகளை உடனடியாக பேசி தீர்க்க வலியுறுத்தி, மனு அளித்துள்ளோம். ஏற்கனவே காத்திருப்பு போராட்டம் நடத்தும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுதும் பல கட்ட ஆதரவு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இடதுசாரி கட்சிகள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த பிரமுகர்கள், காத்திருப்பு போராட்டத்தில் உள்ள நியாயத்தை வலியுறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள், 59வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சு நடத்த அரசு அழைக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது; இது கண்டனத்துக்குரியது.
தீபாவளிக்கு முன்பே ஊழியர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். அடுத்தகட்ட போராட்டத்துக்கு அரசும், அமைச்சரும் எங்களை துாண்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.