சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்: 700 ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்: 700 ஆசிரியர்கள் கைது
UPDATED : பிப் 22, 2024 04:49 AM
ADDED : பிப் 22, 2024 02:38 AM

சென்னை:தமிழகத்தில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாய்; அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 8,370 ரூபாய் அடிப்படை சம்பளம் தரப்படுகிறது. ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிக்கு இருவேறுசம்பளத்தால், 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பள முரண்பாடுகளை களைய கோரி, நேற்று மூன்றாவது நாளாக, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறுகையில், ''சம வேலைக்கு சம ஊதியம் கோரி, மூன்று நாட்களாக போராடி வருகிறோம். பள்ளி கல்வி அமைச்சர், இயக்குனர் என யாரும் பேச்சு நடத்த முன்வரவில்லை.
''இதேநிலை தொடர்ந்தால், மாநிலம் முழுதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.