/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அமைச்சர் ரகுபதியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
/
அமைச்சர் ரகுபதியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் ரகுபதியை கண்டித்து, பா.ஜ., சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றம் தீபத் துாண் விவகாரத்தில், தமிழக அமைச்சர் ரகுபதி, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசி உள்ளார்; இதை கண்டித்து, புதுக்கோட்டையில் இன்று மாலை 4:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

