போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது
போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது
UPDATED : ஆக 14, 2025 12:39 AM
ADDED : ஆக 14, 2025 12:04 AM

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் நடைபற்று வருகிறது. இந்த வழக்கில் போராட்டக்கார்களை அப்புறப்படுத்த . உத்தரவிட்ட நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்ட்டம் நடத்த அறிவுறுத்தியது.
இந்நிலையில்இன்று (ஆக. 14) நள்ளிரவு அதிரடியாக களம் இறங்கியபோலீசார் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் போராட்டக்கார்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக இரவில் 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்த போலீசார் கலைந்து போகுமாறு எச்சரித்த நிலையில், அவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.இதில் பேராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
தற்போது போராட்டக்காரர்கள் முழுதும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பதற்றத்தை தவிர்க்க சென்னை முழுதும் போலீசார் ரோந்து சுற்றிவருகின்றனர்.