ADDED : பிப் 03, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக்கில், மது வாங்குவோருக்கு தரப்படும் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி, நிர்ணயிக்கப்பட்ட விலையுடன், 10 ரூபாய் கூடுதலாகபெறவும், மீண்டும் பாட்டிலை திரும்பப் பெற்று, 10 ரூபாயை அவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில் வெளியில் சொல்ல முடியாத, பல சிரமங்களை டாஸ்மாக் பணியாளர்கள் சந்திந்து வருகின்றனர். விரைவில், இதுதொடர்பான அரசாணையை, டாஸ்மாக்நிர்வாகம் திரும்பப் பெறாவிட்டால், 10 மாவட்டங்களில் உள்ள ஐந்து தொழிற்சங்கங்களை சேர்ந்த கூட்டமைப்பின் ஒப்புதலுடன் டாஸ்மாக் நிர்வாகம் மீது, பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்படும்.
-மோகன்,
ஒருங்கிணைப்பாளர்,
டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டமைப்பு

