ADDED : டிச 03, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,பொதுப்பணி துறை பெயரில், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் போலி பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக, விளம்பரம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, பலரும் ஆர்வமுடன் கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு மொபைல் போன் எண் கொடுக்கப்பட்டு, கூடுதல் விபரங்களை பெறும்படியும் பதில் வருகிறது.
இதன் உண்மை தன்மையை ஆராய்வதற்காக, பொதுப்பணி துறை தலைமை அலுவலகத்தை பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
அதுபோன்று, எந்த சமூக வலைதள பக்கமும் துவங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் பணத்தை ஏமாந்துள்ளனர்.
இதையடுத்து, துறை சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலி சமூக வலைதள பக்க முகவரி உள்ளிட்ட விபரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.