sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

/

பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

6


ADDED : மார் 27, 2024 12:06 PM

Google News

ADDED : மார் 27, 2024 12:06 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் பா.ம,க., நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் பா.ம.க., 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வாக்குறுதிகள் என்னென்ன?


* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்.

* அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு.

* மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி- கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.

* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை.

* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை.

* தனியார் துறை நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

* தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழகத்தை உருவாக்குவோம்.

* 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை' என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

* தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும்.

* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us