ADDED : அக் 10, 2025 12:38 AM
காரைக்கால்:பெண்ணிடம், 50 சவரன் நகையை மோசடி செய்த நபர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மகேஸ்வரி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரு பிள்ளைகளுடன் மகேஸ்வரி தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில், காரைக்கால், சேனியர் குளத்து வீதியை சேர்ந்த செந்தில்குமார், 44, என்பவர் மகேஸ்வரிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவர், இரும்பு கடை மற்றும் பட்டாசு கடை நடத்துவதாகவும், அதில் தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் மகேஸ்வரியிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய மகேஸ்வரி, செந்தில்குமாரிடம், 2017 முதல், 50 சவரன் நகைகளை சிறுக சிறுக கொடுத்துள்ளார். அதை, செந்தில்குமார் பெற்று வங்கியில் அடமானம் வைத்தார்.
வங்கி சேமிப்பு கணக்கில், ஒரு லட்சம் ரூபாயையும் வாங்கியுள்ளார். ஆனால், தொழிலில் வரும் லாப பணத்தை செந்தில்குமார் தராமல் ஏமாற்றியுள்ளார். மகேஸ்வரி புகாரின்படி, கா ரைக்கால் போலீசார், செந்தில்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.