sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதிபதியை குற்றம்சாட்டிய தமிழக அரசுக்கு தண்டனை; பா.ஜ., நயினார் நாகேந்திரன் பேட்டி

/

நீதிபதியை குற்றம்சாட்டிய தமிழக அரசுக்கு தண்டனை; பா.ஜ., நயினார் நாகேந்திரன் பேட்டி

நீதிபதியை குற்றம்சாட்டிய தமிழக அரசுக்கு தண்டனை; பா.ஜ., நயினார் நாகேந்திரன் பேட்டி

நீதிபதியை குற்றம்சாட்டிய தமிழக அரசுக்கு தண்டனை; பா.ஜ., நயினார் நாகேந்திரன் பேட்டி


ADDED : டிச 05, 2025 07:28 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை உயர்நீதி மன்றத்தில் நடந்த அவமதிப்பு வழக்கில் 144 தடை உத்தரவு ரத்து செய்ப்படுவதாகவும், இரவு 7:00 மணிக்குள் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கப்பலுார் டோல்கேட் அருகில் ஓட்டலில் தங்கியிருந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் வந்தார். அங்குள்ள 16 கால் மண்டபம் அருகே நுாற்றுக்கணக்கான தொண்டர்களுடன் காத்திருந்தவர் மலைக்கு செல்ல முயன்றார். அவரிடம் போலீசார், ''144 தடை உத்தரவு உள்ளதால் செல்ல இயலாது'' எனத் தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு குறித்து போலீசாரிடம் தெரிவித்தபோது, ''அதற்கான உத்தரவு எங்களுக்கு வரவில்லை எனவே கலைந்து செல்லுங்கள்'' என்றனர்.

அதேநேரம் மலைப்பாதை துவங்கும் இடத்தில் தடுப்புகளுடன் போலீசார் பலர் திரளாக நின்றனர். அங்கும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள், பக்தர்கள் திரண்டிருந்தனர். நேற்று பவுர்ணமி என்பதால் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். மலைப்பாதை பகுதியில் எஸ்.பி., அரவிந்தன் மற்றும் நுாற்றுக்கணக்கில் போலீசார், தொண்டர்கள் திரண்டு நின்றதால் கிரிவல பக்தர்கள் சிரமப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், ''உயர்நீதிமன்றத்தில் 144 தடை உத்தரவு நீக்கத்திற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே மலைமீது தீபம் ஏற்ற இயலாது. எல்லோரும் கலைந்து செல்லுங்கள்'' என கேட்டுக் கொண்டார். இருப்பினும் கூட்டம் கலையாமல் நின்று கொண்டிருந்தது.

பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்ற கொண்டாட்டத்தின் அடையாளமாக இத்தீர்ப்பு கிடைத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவு உள்ளது என்று வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதில் பொது அமைதிக்கு எங்காவது பாதிப்பு இருந்ததா. இதில் குந்தகம் விளைவிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், வெங்கடேசன் எம்.பி., ஆகியோர் முன்வைத்து நீதிமன்றத்தையே அவமதித்துள்ளனர். ஓட்டு வாங்குவதற்காக முதல்வர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.

எனக்கு முஸ்லிம் சமுதாய நண்பர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பலர் எனக்கு போன் செய்து, அரசு ஏன் தேவையில்லாத பிரச்னையில் ஈடுபடுகிறது என்கின்றனர். நீதிபதியை குற்றம்சாட்டினால் அதற்கு என்ன தண்டனையோ அதனை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதேபோல ஜி.எஸ்.டி., நீட், ஆதார் கார்டு, கவர்னர், ஓட்டுத்திருட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் சென்று தமிழக அரசு குட்டுப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நயினார் நாகேந்திரன் எச்.ராஜா கைது திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள துாணில் இரவு 7: 00 மணிக்குள் தீபம் ஏற்றலாம். நகரில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு அதிகரித்தது. பதினாறு கால் மண்டபம், மலைப்பாதை துவங்கும் பகுதிகளில் பல நுாறு பேர் திரண்டனர்.

பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அமர்பிரசாத் ரெட்டி, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்காக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் உட்பட பலரும் மலைப்பாதை பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்காமல் தடுத்தனர். 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' என போலீசார் கூறினர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நயினார் நாகேந்திரன், 'போலீசாரின் மனச்சாட்சிக்கு தெரியும். மேலிருந்து சொல்வதை அவர்கள் செயல்படுத்துகின்றனர்' என தன்னுடன் இருந்த கூட்டத்தினரை சமாதானம் செய்தார். ரோட்டில் திரண்ட தொண்டர்களில் பலர் அமர்ந்து, 'வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகா' என கோஷங்களை எழுப்பினர். தொண்டர்கள் போலீஸ் உத்தரவை மீறினால் கைது செய்ய வசதியாக ஐந்தாறு வேன்களை போலீசார் கொண்டு வந்தனர். இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் பதட்டமாக இருந்தது.

நீண்ட நேரம் அவர்கள் கலைந்து செல்லாமல் கோஷமிட்டபடியே இருந்தனர். மனுதாரர் ராமரவிக்குமாரை மட்டுமாவது தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதியுங்கள் என்று பா.ஜ.,வினர் கேட்டனர். அதற்கும் மறுத்த போலீசார், 'மேல்முறையீடு செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் அனுமதிக்க முடியாது'' என்றனர். அதன்பின்னும் அவர்கள் கலைந்து செல்லாததால், இரவு 8:00 மணிக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, அமர்பிரசாத் ரெட்டி உட்பட பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us