sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆந்திராவில் 'குவாண்டம் வேலி'; முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

/

ஆந்திராவில் 'குவாண்டம் வேலி'; முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

ஆந்திராவில் 'குவாண்டம் வேலி'; முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

ஆந்திராவில் 'குவாண்டம் வேலி'; முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

1


UPDATED : மார் 29, 2025 02:31 AM

ADDED : மார் 29, 2025 02:29 AM

Google News

UPDATED : மார் 29, 2025 02:31 AM ADDED : மார் 29, 2025 02:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''அமெரிக்காவின் சிலிகான் வேலி போல், ஆந்திராவில் குவாண்டம் வேலி உருவாக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கு பெரிய பரிசாக இருக்கும்,'' என, ஐ.ஐ.டி., மாநாட்டில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில், அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாடு, கடந்த 27ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. நேற்றைய நிகழ்வில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசியதாவது:

உலக அளவில் 31 சதவீதத்தினர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர். அதில், இந்தியர்கள், 65 சதவீதம் பயன்படுத்தி உள்ளனர்.Image 1398374

தற்போது, 'கிளவுடு' இல் தரவுகள் கிடைக்கின்றன. குவாண்டம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்னதாகவே, உயர் தொழில்நுட்பத்தை ஆந்திராவில் உருவாக்கி வருகிறோம்.

அமெரிக்காவின் சிலிகான் வேலி போல், ஆந்திராவில், 'குவாண்டம் வேலி டவர்' உருவாக்கப்படுகிறது.

இது அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டதாக அமையும். இது நாட்டிற்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும் என, நிரூபிக்க போகிறோம்.

இது, மத்திய அரசின் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.பி.எம்., நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். நான் அனைத்து துறைகளிலும், ஆழ்ந்த தொழில்நுட்பத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா மிக உயர்ந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. பொருளாதாரத்தில், 2014ல் 10ம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஐந்தாம் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு நான்காம் இடத்திலும், 2028ல் மூன்றாம் இடத்திற்கு முன்னேறுவோம். வரும் 2047 ல் முதல் அல்லது இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், மக்கள் தொகை குறைப்பை, தென் மாநிலங்கள் செயல்படுத்தின. இதனால், வடமாநிலங்களை ஒப்பிடும்போது, தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

மக்கள் தொகை என்பது தற்போது, பிரச்னையாக உள்ளது. அதேநேரம் உலக அளவில் மூலதனமாகவும் உள்ளது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் தாராளமாக ஆந்திரா நோக்கி வரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, டீன்கள் சத்யநாராயணன் என். கும்மாடி, சாந்தி பவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us