அமைச்சர் மீதான குவாரி வழக்கு நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் மீதான குவாரி வழக்கு நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 15, 2024 06:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு வரும் நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை அரசு செம்மண் குவாரியில், விதிமீறி அதிகளவில் செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு விசா ரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, 51 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளவரசன், விசாரணையை வரும் நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.