ADDED : டிச 10, 2024 11:42 PM
சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான பிரச்னையில், பாலஸ்தீன மக்களுக்காக மனிதநேயமிக்க அறிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நம் அண்டை நாடான வங்க தேசத்தில், பட்டியலினத்தை சேர்ந்த ஹிந்துக்கள், மிக மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வழிபாட்டு தலங்கள், அரசின் ஆதரவோடு தாக்கப்படுகின்றன. அவர்களுக்காக முதல்வர் அறிக்கை வெளியிடாதது ஏன்?
சபாநாயகர் அப்பாவு: வங்கதேசத்தில் நடப்பதையும், மணிப்பூரில் நடப்பதையும் பிரதமர் கவனிக்கவில்லை. இதை பார்லிமென்டில் பேச வேண்டும்.
வானதி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தவில்லை. இதனால், திருச்செந்துாரில் யானைப்பாகன் உயிரிழந்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு: பாதிப்பு ஏற்பட்ட யானைகள் குறித்து, கவனத்திற்கு கொண்டு வந்தால், புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்படும். பழக்கப்பட்ட கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தேவையில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

