sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேள்வி 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன

/

கேள்வி 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன

கேள்வி 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன

கேள்வி 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன


UPDATED : நவ 16, 2025 12:17 AM

ADDED : நவ 16, 2025 12:14 AM

Google News

UPDATED : நவ 16, 2025 12:17 AM ADDED : நவ 16, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பீஹார் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளதால், 'இண்டி' கூட்டணிக்குதலைமையேற்கும் தகுதி, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா என, கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதுகேள்வி கேட்க ஆரம்பித்துள்ளன. 'தலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது' என' திரிணமுல் காங்., வெளிப்படையாகவே விமர்சித்துள்ளதால்,'இண்டி' கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, 'இண்டி' கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு, காங்கிரஸ் கட்சி தலைமை

வகித்தது.

8.71 சதவீதம்

இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான, 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், காங்கிரஸ் மொத்தம் 61 இடங்களில் போட்டியிட்டது; வெறும் ஆறு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 8.71 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., சந்தித்த இந்த படுதோல்வி, 'இண்டி' கூட்டணியின் பிற கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் காரணமாக, 'இண்டி' கூட்டணி தலைமை பொறுப்பில் இருந்து காங்கிரசை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழத்துவங்கி உள்ளன.

இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., முதல் கட்சியாக தலைமையை மாற்றக் கோரி போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது.

'பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க காங்., கட்சியால் முடியாது என்பது தெளிவாக தெரிந்து விட்டது. எனவே, பா.ஜ.,வை வீழ்த்தும் திறன் படைத்த வலுவான கட்சிக்கே கூட்டணியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என, திரிணமுல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி மம்தா பானர்ஜி வரலாறு படைத்ததால், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி மம்தாவுக்கு மட்டுமே உள்ளதாக கல்யாண் பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

'இண்டி' கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த புகைச்சலால், மற்ற சிறிய கட்சிகளும் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளன. திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, சிவசேனா, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள், இனி வரும் காலங்களில் பிராந்திய கட்சிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போதே, இந்த கட்சிகள் தனித்து இயங்க முயன்றது தெளிவாக தெரிந்தது. காங்கிரசுக்கு பதிலாக வெளிப்படையாகவே ஆம் ஆத்மிக்கு ஆதரவு

தெரிவித்து இருந்தன.

அழுத்தம்

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா என அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் வரிசை கட்டியுள்ளன. அதற்கு அடுத்த ஆண்டான, 2027ல் கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹிமாச்சல் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் நடக்கஉள்ளன. 'இதை கருத்தில் கொண்டு, பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க புதிய அணுகுமுறை அவசியம்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துஉள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் எம்.ஏ.,பேபி கூறுகையில், ''பீஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட விரும்பின. பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஒற்றுமை என்பதை நாட்டிற்கு புரியவைக்க முனைந்தன. ஆனால், அது நடக்கவில்லை. ''எனவே, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தேர்தல் தோல்வி குறித்து தனித்தனியே அலசி ஆராய வேண்டும். அதன் பின், கூட்டணி கட்சிகள் ஒன்றாக கலந்து பேச வேண்டும்,'' என்றார்.

பீஹார் தேர்தலில், 'ஓட்டு திருட்டு' என்ற ராகுலின் பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. 'அதற்கு ஆளும் கூட்டணி வகுத்த தரமான வியூகமே காரணம்' என்கிறார் ஜம்மு - காஷ்மீர் முதல்வரான ஒமர் அப்துல்லா.

''ராகுல் நடத்திய, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், மக்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்றனர். இதை பார்த்து, தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதை காங்., கட்சிக்கு ஏற்பட்டது. இந்த யாத்திரையால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதே தவிர, ஆக்கபூர்வமாக எந்த மாற்றமும் நிகழவில்லை.

''தேர்தல் முடிவுகளை உற்று பாருங்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடம் இருந்ததாகவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நிதிஷ்குமார் அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்,'' என்கிறார் ஒமர் அப்துல்லா

பீஹாரில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால், உத்தர பிரதேசம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில், இனி காங்., கட்சியால் அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியாது. ஏனெனில் பீஹாரில், 61 தொகுதிகளை பிடிவாதமாக பெற்ற காங்., அதற்கேற்றபடி தேர்தலில் கடுமையாக உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.

தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தனித் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் வாக்காளர்கள், 'இண்டி' கூட்டணியை கண்டு கொள்ளவே இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரமும் 'இண்டி' கூட்டணிக்குள் உரசல்களை அதிகபடுத்தி இருக்கின்றன.

பீஹார் தேர்தல் முடிவுகள் காங்., கட்சியின் திறமையின்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, கூட்டணிக்கான தலைமை, வியூகம், பிராந்திய தன்னாட்சி ஆகிய விவகாரங்களிலும் கூர்மையான விவாதங்களை எழுப்பி இருக்கிறது.






      Dinamalar
      Follow us