தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வினாத்தாள் தயாரிப்பு: டி.ஆர்.பி., விளக்கம்

 வினாத்தாள் தயாரிப்பு: டி.ஆர்.பி., விளக்கம்

 வினாத்தாள் தயாரிப்பு: டி.ஆர்.பி., விளக்கம்


ADDED : ஜூலை 07, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'சிறப்பு 'டெட்' தேர்வு வினாத்தாள், விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: தேசிய ஆசிரியர் கல்விக்குழுமமான என்.சி.டி.இ.,யின் வழிகாட்டுதல்கள், பள்ளிக்கல்வித் துறை அரசாணைகளை பின்பற்றி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கிய, பாடத்திட்டத்தின் அடிப்படையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன.

'டெட்' தேர்வின் முதல் தாளில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டாலும், அவற்றின் தரம் மற்றும் தொடர்பு, இரண்டாம் நிலையான 10ம் வகுப்பு வரை இருக்கும் என, ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல், இரண்டாம் தாளில், வினாக்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட தலைப்புகளில் இருந்து கேட்கப்பட்டாலும், அவற்றின் தரம் மற்றும் தொடர்பு, பிளஸ் 2 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதிகளை பின்பற்றியே, வினாத்தாள் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us