‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...'': கண்ணீர் மல்க ‛புது குண்டு' போட்ட வனிதா
‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...'': கண்ணீர் மல்க ‛புது குண்டு' போட்ட வனிதா
UPDATED : ஜூலை 12, 2025 12:48 PM
ADDED : ஜூலை 12, 2025 12:47 PM

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, கதை நாயகியாக நடித்த ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படம் நேற்று வெளியானது. சென்னை, கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த வனிதாவிடம் ''உங்க படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி' பாடலை பயன்படுத்தக் கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வனிதா, ‛‛தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன்.
பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இளையராஜா வீட்டில் அவர் மனைவி ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி, நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். அந்த வீட்டுக்கு நிறைய உழைச்சிருக்கேன். இளையராஜா வீட்டுக்கு மருமகள் ஆக வேண்டியது. இதற்குமேல் பேச விரும்பவில்லை'' என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.


சரி, இளையராஜா வீட்டுக்கு மருமகள் என எந்த அர்த்தத்தில் வனிதா பேசினார் என்று விசாரித்தால், பலருக்கும் குழப்பம். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என 2 மகன்கள். இதில் யாருக்கு அவரை திருமணம் செய்ய நினைத்தார்கள். யாருடன் காதல் இருந்தது அல்லது இளையராஜா குடும்பத்தில் யாருடனாவது வனிதாவை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அப்போது என்ன நடந்தது என பலரும் துப்பறிந்து வருகிறார்கள்.

