விருதுநகரில் ராதிகா; மதுரையில் ராமசீனிவாசன்: தமிழக பா.ஜ.,வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்
விருதுநகரில் ராதிகா; மதுரையில் ராமசீனிவாசன்: தமிழக பா.ஜ.,வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்
UPDATED : மார் 22, 2024 04:23 PM
ADDED : மார் 22, 2024 02:58 PM

சென்னை : தமிழக பா.ஜ.,வின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவும், மதுரையில் பேராசிரியர் ராமசீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். நேற்று 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை - தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது.
இதன்படி,
01. திருவள்ளூர்- பாலகணபதி
02. வட சென்னை -பால் கனகராஜ்
03.திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
04.நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
05.திருப்பூர் - ஏபி முருகானந்தம்
06.பொள்ளாச்சி - வசந்தராஜன்
07.கரூர் - செந்தில்நாதன்
08.சிதம்பரம் - கார்த்தியாயினி
09.நாகப்பட்டினம் - ரமேஷ்
10.தஞ்சாவூர்- முருகானந்தம்
11.சிவகங்கை- தேவநாதன்
12.மதுரை- ராம சீனிவாசன்
13.விருதுநகர்- ராதிகா
14.தென்காசி -ஜான்பாண்டியன்
15.புதுச்சேரி -நமச்சிவாயம்
விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுகிறார்,

