'ராகுலும், ஸ்டாலினும் உடன்பிறவா சகோதரர்கள்': காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
'ராகுலும், ஸ்டாலினும் உடன்பிறவா சகோதரர்கள்': காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
ADDED : பிப் 29, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் இழுபறி இல்லை,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறாக சித்தரித்து கருத்துக்களை பதிவு செய்கின்றன; இஷ்டத்திற்கு அரசியல் நாகரிகமற்ற செய்திகளை வெளியிடுகின்றன. யூகங்களின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டு, குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.
தி.மு.க., கூட்டணி குறித்த பேச்சு டில்லியில் நடக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. 2019 தேர்தலிலும், இறுதியில் தான் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்து போடப்பட்டது.
அதனால் அவசரம் இல்லை; இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் உடன்பிறவா சகோதரர்கள்; அதை பிரிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

