உள்ளடக்கத்திற்கு செல்ல

ராகுல் அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்?: அந்துமணி பதில்கள்
ராகுல் அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்?: அந்துமணி பதில்கள்
UPDATED : நவ 04, 2026 02:39 AM
ADDED : நவ 04, 2026 02:36 AM

அ நிறம் | அளவு
மிகவும் பெருமிதம் விஷயம் இது! குக்கிராமங்களிலிருந்தும், பராக்கிரமத்துடன் விளையாடக் கிளம்பும் இவர்களை, சரியான முறையில் வழிப்படுத்தி, போதிய வசதிகள் செய்ய மத்திய - மாநில அரசுகள் முயல்கின்றன; ஆனாலும் சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தால், மேலும் பல வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவர்!
முப்பது நிமிடங்களுக்கு மேல் தாமதமானால், 25 சதவீத தொகையை அளிக்கும். நேரம் கூடக் கூட, தொகையும் கூடும். இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் வந்தால், ரயில்வே துறை, பல கோடிகளில் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டி இருக்கும்.
நல்ல முன்னெடுப்பு; மாணவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். நம்மூரிலும் இப்படி விஞ்ஞானிகளின் படங்கள் வைக்கப்பட்டால், நம் மக்கள் அவற்றுக்கு பாலாபிேஷகமே செய்வரே!
நம் இந்தியா, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, பல துறைகளில் சாதித்து வருகிறது. விரைவில் வல்லரசாக வலு பெறும்.
வியட்நாம் வேகமாக வளர்ந்து வரும் நாடு. இன்று உலகமே பேசும், 'செமி கண்டக்டர்' எனும், மின்சார விநியோகத்தில் உபயோகப்படுத்தப்படும் கருவியின் ஒரு பாகம் உட்பட பல புதிய பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதனால் ராகுல் அங்கு முதலீடுகள் செய்வதற்காக சென்றிருப்பார். கஞ்சா கூட அமோகமாக விற்கப்படுகிறது; புரிந்து கொள்ளுங்கள் கீதா!
விமர்சனத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் விமர்சிப்பவர்கள் தரம் உணர்ந்து பேச வேண்டும் என்பது தான் பலரின் ஆதங்கம்.
