"ராகுல் யாத்திரை செல்வது ஜோக்கர் மாதிரி தான்": எல்.முருகன் பேட்டி
"ராகுல் யாத்திரை செல்வது ஜோக்கர் மாதிரி தான்": எல்.முருகன் பேட்டி
UPDATED : ஜன 24, 2024 04:25 PM
ADDED : ஜன 24, 2024 04:24 PM

ஈரோடு: 'ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை கண் துடைப்பு. அவர் செல்வது ஜோக்கர் மாதிரி தான்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஈரோட்டில் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இண்டியா கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடையும். மக்களை ஏமாற்றும் கூட்டணி.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். ராமர் கோயில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர் காய முடியுமா என தி.மு.க., தான் எதிர்நோக்கி காத்திருந்தது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை கண் துடைப்பு. அவர் செல்வது ஜோக்கர் மாதிரி தான். மக்களுக்கு தேவையில்லாத யாத்திரையை நிறுத்தி விட்டு, பயனுள்ள காரியத்தை செய்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

