sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்

/

ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்

ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்

ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்

26


UPDATED : ஜன 13, 2026 06:05 PM

ADDED : ஜன 13, 2026 03:36 PM

Google News

UPDATED : ஜன 13, 2026 06:05 PM ADDED : ஜன 13, 2026 03:36 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: '' ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

நடனம்

Image 1521369நீலகிரி மாவட்டம் கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் ராகுல் கலந்து கொண்டார். இதற்காக மைசூருவில் இருந்து நீலகிரி வந்த ராகுலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Image 1521370 பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கல் வைத்ததுடன், தோடர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

நோக்கம்

Image 1521371இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம். ஏராளமான தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன. தகவல்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் உலகம் மோசமாக மாறிவிடும். அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மற்ற மதத்தினரின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.

பல மாணவர்களிடம் என்னவாக கேட்க வேண்டும் என கேட்டபோது, பைலட், பொறியாளர் ஆக வேண்டும் என்றனர். ஒரு மாணவர் கூட அரசியல்வாதியாக மாற விரும்பவில்லை. ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் வகையில் இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம். அத்தகைய நாட்டை உருவாக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்

Image 1521372இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறும் போது, பெண்களை விட ஆண்கள் திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர்.ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். ஐடி துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. எனது குடும்பத்தில் பாட்டி இந்திரா எல்லாமுமாக இருந்தார். பள்ளியில் குறும்புக்கார மாணவராக இருந்தேன்.

பள்ளியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், பெற்றோரிடம் அப்படி இல்லாதது போல் காட்டிக் கொண்டேன். பெற்றோரை அடிக்கடி வர வைக்க மகிழ்ச்சியாக இல்லை எனக்கூறினேன். பள்ளியில் குறும்பு செய்யும் மாணவராக இருந்தேன். கைவினை கலைஞர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.கல்வ வழங்குவதில் அரசின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். கல்வியை தனியார் மயமாக்கக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.ஆட்சியாளர்களே ஜனநாயகத்தை சிதைக்கின்றனர். அவதூறு செய்பவர்கள் தங்களை தாங்களே அவமதித்துக் கொள்கின்றனர்.

Image 1521373ஜனநாயகம் என்பது நமக்கான குரல். நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகும்போது குரல் கொடுக்கிறேன். ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us