தண்டவாளம் மேம்பாட்டு பணி 9 ரயில் போக்குவரத்தில் மாற்றம்
தண்டவாளம் மேம்பாட்டு பணி 9 ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ADDED : நவ 09, 2024 10:22 PM
சென்னை:ரயில்வே தண்டவாளம் மேம்பாட்டு பணியால், ஒன்பது ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில் நிலைய சந்திப்பு அருகே உள்ள பாலத்தில், தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், நாளை முதல், 21ம் தேதி வரை, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
l காரைக்குடி - திருச்சி காலை 9:40 மணி ரயில், வரும் 13 முதல் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
l மயிலாடுதுறை - திருச்சி காலை 8:05 மணி ரயில், மேற்கண்ட நாட்களில் பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும்
l ஈரோடு - திருச்சி காலை 8:10 மணி ரயில், இந்த நாட்களில் திருச்சி போர்ட் வரை மட்டுமே இயக்கப்படும்
l விழுப்புரம் - திருச்சி அதிகாலை 5:10 மணி ரயில், பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும்
l திருச்சி - விழுப்புரம் மாலை 6:00 மணி ரயில், வரும் 11 முதல் 21 வரை பொன்மலையில் இருந்து இயக்கப்படும்
l திருச்சி - பாலக்காடு டவுன் மதியம் 1:00 மணி ரயில், 11 முதல் 21ம் தேதி வரை, திருச்சி போர்ட்டில் இருந்து இயக்கப்படும்
l திருச்சி - மயிலாடுதுறை மதியம் 1:10 மணி ரயில், 11 முதல் 21ம் தேதி வரை, திருவெறும்பூரில் இருந்து இயக்கப்படும்
l ஜம்மு காஷ்மீர் மாநிலம், வைஷ்ணவா தேவி காட்ரா - திருநெல்வேலி இரவு 10:25 மணி ரயில், வரும் 14ம் தேதி கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால், திருச்சி செல்லாது
l காச்சிகுடா - நாகர்கோவில் மாலை 3:45 மணி வாரந்திர ரயில், வரும் 17ம் தேதி கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால், திருச்சி செல்லாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.