முசிறி - சென்னை ரயில் பாதை தெற்கு ரயில்வே திட்டம்
முசிறி - சென்னை ரயில் பாதை தெற்கு ரயில்வே திட்டம்
ADDED : ஏப் 11, 2026 04:29 AM
சென்னை; தெற்கு ரயில்வேயில் புதிய ரயில் பாதை திட்டங்களில், ஒன்றாக முசிறி - சென்னை வழித்தடம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இதற்கான ஆய்வு பணிகள் நடந்தன. அதன்பின், திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற அடுத்தகட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு பின், இந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், தெற்கு ரயில்வே மீண்டும் பணியை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி அருகில் உள்ள முறிசியில் இருந்து சென்னையை இணைக்கும் வகையில், 350 கி.மீ., துாரம் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள் ளோம்; 88 லட்சம் ரூபாயில் ஆரம்ப கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
முசிறியில் இருந்து ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக, சென்னையை இணைக்கும் புதிய ரயில் பாதை அமைத்தால், பயணியர் வருகை அதிகமாக இருக்கும். அதுபோல், சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதற்கான ஆய்வு அறிக்கை தயாரித்து, முதல்கட்ட ஒப்புதலுக்கு பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
