தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்

 ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்

 ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்


ADDED : ஆக 12, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ரயில் பயணியரின் கோரிக்கைகளை ரயில்வே கவனத்திற்கு எடுத்து செல்ல, தமிழகம் முழுதும் பல்வேறு ரயில் பயணியர் சங்கங்கள், மாவட்ட, மாநில அளவில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து, தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளன. இதன் தலைவராக சுப்பிரமணியன், பொதுச்செயலராக நஜிப் இசக் கனி, பொருளாளராக ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, கூட்ட மைப்பின் தலைவர் சுப்பிர மணியன் கூறியதாவது:

பயணியர் தேவைக்கு ஏற்ப ரயில்களை அதிகரிக்க, ரயில்வே துறையிடமும், ரயில் பாதைகளுக்கு நிலம் கையகப்படுத்தி தரும்படி, தமிழக அரசிடமும் வலியுறுத்துவோம்.

பயணியர் அதிகம் உள்ள இடங்களில், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்த வசதி, குறுகிய துார ரயில்களின் சேவையை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் ரயில்களின் சேவை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ரயில்வே கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us