தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில் பாதை மேம்பாட்டு பணி 10 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

 ரயில் பாதை மேம்பாட்டு பணி 10 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

 ரயில் பாதை மேம்பாட்டு பணி 10 விரைவு ரயில் சேவையில் மாற்றம்


ADDED : செப் 05, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரயில் கோட்டங்களில், இந்த மாதத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில், வரும் 14, 19ம் தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக இயக்குவதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது

நாகர்கோவில் - காச்சிகுடா ரயில், வரும் 29, அக்., 3ம் தேதிகளில் திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படுவதால், திருச்சி செல்லாது

நாகர்கோவில் - மஹாராஷ்டிரா மாநிலம் லோக்மானிய திலக் ரயில், வரும் 10, 24ம் தேதிகளில் மானாமதுரை, திருச்சி வழியாக செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது

நாகர்கோவில் - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி ரயில், வரும் 13ம் தேதி போத்தனுார் வழியாக செல்வதால், கோவை செல்லாது

கர்நாடகா மாநிலம் மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 6, 13ம் தேதிகளில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும்

மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 10ம் தேதி, 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

கன்னியாகுமரி - மஹாராஷ்டிரா மாநிலம் புனே ரயில், வரும் அக்., 3ம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

எழும்பூர் - கேரள மாநிலம் குருவாயூர் ரயில், வரும் 5, 8, 9, 11, 15, 19, 22, 23ம் தேதிகளில், 50 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில், வரும் 10ம் தேதி 50 நிமிடங்கள் தாதமாக செல்லும்

எழும்பூர் - குருவாயூர் ரயில், வரும் 21, 26, 28, 30, அக்., 3, 5, 7, 10ம் தேதிகளில், ஒரு மணி நேரம் தாமதாக செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us