sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி

/

புதிய ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி

புதிய ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி

புதிய ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி


ADDED : மார் 19, 2024 01:39 AM

Google News

ADDED : மார் 19, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி, மங்களூரு - ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

எனவே, பயணியர் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்களின் சேவையை துவங்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

 துாத்துக்குடியில் இருந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 10:50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் காலை 7:15 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.

மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 8:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு துாத்துக்குடிக்கு செல்லும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும்

 கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் காலை 11:45 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.

 மறுமார்க்கமாக, ஞாயிறுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 5:50 மணிக்கு செல்லும். இந்த ரயில் ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட உள்ளன.

இதற்கான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us