ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஜூலைக்கு தள்ளிவைப்பு
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஜூலைக்கு தள்ளிவைப்பு
ADDED : பிப் 13, 2024 04:24 AM
சென்னை: 'ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு பிறகே நடத்தப்படும்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே, தேர்தலில் பங்கேற்க முடியும். கடந்த, 2013ல் நடந்த தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., 43 சதவீத ஓட்டுக்களை பெற்று அங்கீகாரம் பெற்றது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2019ம் ஆண்டுக்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை.
இதற்கிடையே, டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த வழக்கில், அடுத்த நான்கு மாதங்களில் நடத்துவதாக ரயில்வே உறுதியளித்தது.
இதையடுத்து, ரயில்வேயின் கீழ் செயல்படும், 17 மண்டலங்களிலும் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வந்தன.
ஆனால், விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலை, வரும் ஜூலை அல்லது ஆகஸ்டிற்கு, ரயில்வே வாரியம் ஒத்திவைத்துள்ளது.