sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு

/

வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு

வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு

வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு

5


ADDED : டிச 22, 2025 01:55 AM

Google News

5

ADDED : டிச 22, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'விரைவு ரயில்களில், 215 கி.மீ., துாரத்துக்கு மேல், 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமலுக்கு வரும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேயில் நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12,617 பயணியர் ரயில்கள், 11,700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 2.40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வேயின் சராசரி வருவாயில், சரக்கு பிரிவில் மட்டும் 70 சதவீதம் வரை கிடைக்கிறது.

புதிய ரயில் பாதை, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில் பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 'கவச்' தொழில்நுட்பம் அறிமுகம் போன்ற திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரயில் கட்டணம், வரும் 26 முதல் சிறிய அளவில் உயர்த்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில், ரயில்வே தொழிலாளர்களின் சம்பளம் 1.15 லட்சம் கோடி ரூபாய், ஓய்வூதியம் 60,000 கோடி ரூபாய், ரயில்களை இயக்குவதற்கான செலவு 2.63 லட்சம் கோடி ரூபாய். அதனால், சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமல்படுத்தப்படும்.

அதன்படி, 215 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கி.மீ., வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயரும். அதேபோல, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கி.மீ.,க்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.

இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். சரக்கு ரயில் இயக்கப் பிரிவில், ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, சரக்கு ரயில்கள் இயக்கத்தில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்திய ரயில்வே உள்ளது; தொலைநோக்கு திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீசன் டிக்கெட்:


மும்பை, சென்னை, டில்லி, கொல்கட்டா நகரங்களில், புறநகர் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது. மொத்தமுள்ள ரயில் பயணியரில் 54 சதவீதம் பேர், மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த பிரிவு பயணியருக்கு, புறநகர் மின்சார ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதுபோல, சீசன் கட்டணம், நடைமேடை கட்டணமும் உயர்த்தப்படவில்லை.Image 1511176

'வந்தே பாரத் கட்டணத்தை குறைக்க வேண்டும்'


ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், இரண்டாம் முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி கட்டணத்தை உயர்த்திய போது, 500 கி.மீ., வரை உயர்த்தவில்லை. தற்போது, 215 கி.மீ., துாரத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை, 500 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்வோருக்கு, 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மேலும், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், 500 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்வோருக்கு, கடந்த ஆண்டை விட 15 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில், இது மூன்றாவது கட்டண உயர்வு தான். 2020ம் ஆண்டு, ஏசி கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டது. சில மாதங்களில் மீண்டும் கட்டண உயர்வு மேற்கொள்ளும் நடவடிக்கை, ரயில்வே அமைச்சகத்தின் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. பயணியரை கவரும், 'வந்தே பாரத்' ரயில்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



வளர்ச்சிக்கு உதவும்


தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: ரயில்வேயில் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிய வகை ரயில்கள் இயக்கம், ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்தில் மேம்பாடு, 'கவச்' போன்ற நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்திட, பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது, சிறிய அளவில் ரயில் கட்டணத்தை உயர்த்தி இருப்பது, பயணியரை பெரிய அளவில் பாதிக்காது. இது, பெரிய சுமையாகவும் இருக்காது. நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு, இந்த கட்டண உயர்வு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us