ADDED : அக் 16, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னைக்கு இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று இரவில் சற்று மழை விட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதல், சென்னையின் பல இடங்களிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று மதியத்திற்கு மேல், சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.