sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழை முன்னெச்சரிக்கை: ஆறு, ஏரிகள் கண்காணிப்பு

/

மழை முன்னெச்சரிக்கை: ஆறு, ஏரிகள் கண்காணிப்பு

மழை முன்னெச்சரிக்கை: ஆறு, ஏரிகள் கண்காணிப்பு

மழை முன்னெச்சரிக்கை: ஆறு, ஏரிகள் கண்காணிப்பு


ADDED : அக் 10, 2024 02:42 AM

Google News

ADDED : அக் 10, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை 112 சதவீதம் அளவிற்கு மேல் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கம் நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தில், தலைமை கட்டுப்பாட்டு மையமும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் மண்டல கட்டுப்பாட்டு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 24 மணி நேரமும் இரண்டு 'ஷிப்ட்' அடிப்படையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மழை துவங்கியது முதல் இந்த அவசர கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படத் துவங்கும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு மையங்களில் பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் முதல்வர் அலுவலகத்திற்கும், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மையத்திற்கும் அனுப்பும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us