ADDED : அக் 13, 2024 06:10 AM
வேலுார்: வேலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று மதியம் வரை இடி, மின்னலுடன் கனமழை விட்டு விட்டு பெய்தது. வேலுார் கிரீன் சிக்னல், தெற்கு போலீஸ் ஸ்டேஷன், கஸ்பா உள்ளிட்ட பல இடங்களிலும் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியது.
சத்துவாச்சாரி, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தாழ்வான குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. வேலுார் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு தோண்டிய சாலைகள் சீரமைக்காததால், சாலை முழுவதும் சேரும், சகதியுமாக மாறியது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, மேல் விஷாரம், அரக்கோணம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில், நேற்று விட்டு விட்டு கன மழை பெய்ததில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.