'ரெயின்போ கார்டன்' என்ற வீட்டுமனை குடியிருப்பு திட்டம் ரூ.48 லட்சத்தில் தனி வீடு
'ரெயின்போ கார்டன்' என்ற வீட்டுமனை குடியிருப்பு திட்டம் ரூ.48 லட்சத்தில் தனி வீடு
ADDED : நவ 29, 2024 11:34 PM
ஆவடி புதிய டைடல் பூங்கா அருகில், 'ரெயின்போ கார்டன்' என்ற பெயரில் புதிய வீட்டுமனை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு, 28 லட்சம் ரூபாயில் வீட்டு மனை, 48 லட்ச ரூபாயில் தனி வீடு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, 'மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
'மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ்' நிறுவனம் சார்பில், சென்னை புறநகர் பகுதிகளில், பல்வேறு குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஆவடியில் சமீபத்தில் துவக்கப்பட்ட, புதிய டைடல் பூங்கா அருகில், 'ரெயின்போ கார்டன் ரெசிடென்ஷியல் டவுன்ஷிப்' என்ற பெயரில் புதிய வீட்டு மனை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த விழாவில், இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில், 700 முதல், 2,000 சதுர அடி பரப்பளவில், 120 வீட்டு மனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, 28 லட்சம் ரூபாய் விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 48 லட்சம் ரூபாய் விலையில், தனி வீடுகளும் விற்கப்பட உள்ளன.
மனை வாங்கி உடனடியாக வீடு கட்டி குடியேற ஏற்ற வகையில், அனைத்து வசதிகளுடன் வீட்டு மனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து, 10 நிமிட பயணத்தில், ஆவடி பேருந்து நிலையம், வெளி வட்ட சாலை, புதிய டைடல் பூங்கா போன்றவை அமைந்துள்ளன.
வீடுகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
மனை முன்பதிவு முதல் புதிய வீட்டை கட்டி முடித்து அதற்கான கிரகப்பிரவேசம் வரை அனைத்து சேவைகளையும் செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.