ADDED : ஆக 15, 2026 06:24 AM

சென்னை: 'இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங் கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில், மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வட கடலோர தமிழகம் மற்றும் பிற பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன், லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
