உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 12, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
சென்னை : 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
தற்போது, தமிழக கடலோரப்பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
