ராஜகண்ணப்பன் துறை மாற்றம்; பொன்முடிக்கு கூடுதலா இலாகா
ராஜகண்ணப்பன் துறை மாற்றம்; பொன்முடிக்கு கூடுதலா இலாகா
ADDED : பிப் 13, 2025 05:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தி.மு.க., அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இன்னும் சில நாட்களில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: முதல்வர், பரிந்துரைப்படி ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. பொன்முடி, வனம், காதி மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சராக இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இனிமேல் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார்.