நாமும் நல்லாட்சி வழங்குவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் அன்புமணி!
நாமும் நல்லாட்சி வழங்குவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் அன்புமணி!
ADDED : நவ 09, 2024 12:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராஜராஜ சோழன் பிறந்தநாளில் பா.ம.க., ஆட்சியை நிறுவுவோம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய ராஜராஜ சோழனின் 1039ம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன்.
பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம். நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்.
இவ்வாறு அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.