ADDED : அக் 01, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படம் வரும் 10ல் வெளியாக உள்ளது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ரஜினி நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். அதற்கான பரிசோதனை நடந்து வருவதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.