sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

/

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

9


ADDED : மார் 04, 2026 08:33 PM

Google News

9

ADDED : மார் 04, 2026 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா , கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் திமுக அலுவலகத்தில் காங்கிரசு உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான சில நிமிடங்களில் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

அதில், தற்போதைய எம்பி திருச்சி சிவா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.இம்முறை ராஜ்யசபா தேர்தலில் தமிழகம் சார்பில் ஆறு பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்எல்ஏக்கள் பிரதிநிதித்துவம் அடிப்படையில் திமுக எம்பிக்களை 4 எம்பிக்களை அனுப்ப முடியும். 4 பேரில் ஏற்கனவே ஒரு இடத்தை தேமுதிகவுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 3 பேரில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு இன்று ஒதுக்கியது. இதுபோக மீதமுள்ள 2 இடங்களுக்கு திமுக வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

6வது முறை எம்பி ஆக உள்ள திருச்சி சிவா திமுக துணை பொதுச்செயலாளர் ஆகவும் உள்ளார். 2019 ம் ஆண்டில் சிறந்த பார்லிமென்டரியன் என்றவிருதையும் பெற்றவர்.ராஜ்யசபா தேர்தலில்போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு அடைகிறது. மார்ச் 16 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக , தேமுதிக, காங்கிரஸ் தங்களதுவேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us