ADDED : மார் 15, 2025 06:29 PM

உண்மையான ஏழை
ஏழை என்பவர் யார் என நபிகள் நாயகம் தோழர்களிடம் கேட்டார். அனைவரும் 'யாரிடம் பணம் இல்லையோ அவர் தான் ஏழை' என்றனர். ஆனால் அவர் அளித்த பதில் வித்தியாசமாக இருந்தது.
'பணம் இல்லாதவர் ஏழை அல்ல. மாறாக தீமை செய்தவரே ஏழையாவர். மண்ணை விட்டுச் சென்ற பின் மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் நிறுத்தப்படுவான். அந்த நபர் உலகில் எவருக்கேனும் அநியாயம் செய்திருப்பார். அநீதியாக பேசி இருப்பார். அவதுாறாக பேசியிருப்பார். எவருடைய சொத்தையாவது அபகரித்திருப்பார்.
இவரது கணக்கு வழக்குகளை எதை வைத்து நேராக்குவது? அதுதான் நற்செயல்கள். அதாவது அவர் செய்த அநீதிக்கு ஈடாக, அவருடைய நன்மைகள் அநீதி இழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.
எனவே நன்மை செய்தால் மட்டும் போதாது. அநியாயம் செய்யாமலும் இருக்க வேண்டும். பத்து நன்மை செய்து விட்டு இரண்டு அநியாயம் செய்தாலும் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே நன்மை செய்யாமல் இருப்பவரே உண்மையான ஏழை' என்றார்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி