ADDED : மார் 28, 2025 06:24 PM

தர்மம் கொடுங்கள்
பெருநாளை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் நபிகள் நாயகம் கூறிய அறிவுரைகளை படிப்போம்.
* ரம்ஜான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்தி கொள்ளுங்கள்.
* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் வணக்கம் செய்தாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.
* ஈத் பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுப்பது அவசியம்.
* பித்ரா தர்மம் செலுத்தாத வரை ஒரு அடியானின் நோன்பு பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த தர்மம் கொடுத்த பின்புதான் நோன்பு வானகம் செல்லும். எனவே அதை நிறைவேற்றி விடுங்கள்.
சரி. தர்மம் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும். உணவு கொடுத்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என 'துஆ' செய்யலாம். அதுவே உணவு கொடுத்தவருக்கு செய்யும் நன்றிக்கடன். இப்படி எல்லோரும் இறைப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி