ADDED : மார் 16, 2024 06:42 PM

உலகமே பணத்தின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது. பணத்திற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
''ஒருவர் பணக்காரராக வேண்டும் என விரும்பினால் அல்லது ஆயுள் நீடிக்க வேண்டும் என விரும்பினால் உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்” மேலும், ''இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்தால் அவன் பசியாற ஏதாவது கொடுங்கள். கணவரை இழந்த பெண்கள், ஏழைகளின் மீது இரக்கப்படுங்கள். பொருளுதவி செய்யுங்கள்.
“பொருள் தேடுவதற்காகவே வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பவரையும், சம்பாதித்த பணத்தில் சிறிதும் தர்மம் செய்யாதவரையும் இறைவன் புறக்கணிப்பான்” என எச்சரிப்பதோடு, “பொருட்செல்வத்தை சம்பாதிப்பதை விட ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது” என்கிறார்.
நல்ல வழியில் சம்பாதித்து பிறருக்கு உதவுவோம்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி

