sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் முடிவு

/

 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் முடிவு

 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் முடிவு

 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் முடிவு

3


ADDED : மார் 22, 2026 03:52 AM

Google News

ADDED : மார் 22, 2026 03:52 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலில், சசிகலா கட்சியின் சின்னமான, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட, பா..ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை துவக்கியுள்ள சசிகலாவும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் கூட்டணி அமைத்துள்ளனர்.

பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, அக்கட்சியின் மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

இதனால், வரும் தேர்தலில் பா.ம.க.,வின் பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை ராமதாஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசும், சசிகலாவும் சந்தித்தபோது, இது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ள தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர்கள், முக்குலத்தோர் அதிகம் உள்ள டெல்டா மாவட்டங்கள், வடக்கு, தென் மாவட்டங்களில், அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து, இருவரும் ஆலோசித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us