தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/புதிய இயக்கம் தொடங்கினார் ராமதாஸ்

புதிய இயக்கம் தொடங்கினார் ராமதாஸ்

புதிய இயக்கம் தொடங்கினார் ராமதாஸ்


ADDED : நவ 24, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசியல் களத்தில் இருந்து விலகி இருந்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ‘தமிழ் மீட்பு இயக்கம்’ எனும் புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த ஜூலை 25ம் தேதி, தன் 88 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். விழாவில் பேசிய ராமதாஸ், ‘‘நான் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியலில் நான் தலையிட மாட்டேன். கட்சி தலைவர் அன்புமணி பார்த்துக் கொள்வார்,’’ என, அறிவித்தார். இந்நிலையில், ‘தமிழ் மீட்பு இயக்கம்’ எனும் புதிய இயக்கத்தை, ராமதாஸ் தொடங்கி உள்ளார்.

அவரது அறிக்கை:

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது, இன்று வரை, தமிழகத்தில் ஒரு வெற்று முழக்கமாகவே உள்ளது. தமிழில் உரையாடும்போதும், ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளின் கலப்படம், அனைத்து மக்களிடமும் ஊடுருவி உள்ளது. கடை வீதிகளில் பெயர் பலகைகளில், தமிழ் இடம் பெற வேண்டும் என்ற அரசாணை, நீதிமன்ற உத்தரவுகள், கவனத்தில் கொள்ளப்படவில்லை. இத்தகைய மொழி அழிவு போக்கு, தமிழ் இனத்தின் மீள முடியாத வீழ்ச்சிக்கான உறுதியான சான்று.

தமிழ் மொழியை மீட்கவும், தமிழ் என்ற நமது மொழியை, தமிழர் வாழ்வியலின் பயன்பாட்டு மொழியாக மாற்றவும், நாம் தொடர்ந்து போராட வேண்டும். தமிழின் உரிமைகளை மட்டுமே, ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு, ‘தமிழ் மீட்பு இயக்கம்’, பல்வேறு தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து, என் பொறுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின், முதல் கலந்துரையாடல் கூட்டம், கடந்த 22ம் தேதி என் தலைமையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகள், கலந்தாய்வு கூட்டங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு. அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us