ADDED : ஆக 27, 2026 07:24 AM

திண்டிவனம்: அரசியலில் இருந்து துறவறம் பூணுவதாக அறிவித்திருந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வரும் செப்., 1 முதல் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ராமதாசுக்கும் அவரது மகனும் பா.ம.க., தலைவருமான அன்புமணிக்கும் இடையே நீடித்த மோதல், கடந்த ஜூன் 24ல், ராமதாஸ் திருமண நாளன்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, 'அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன். இனிமேல் அரசியலில் தலையிட மாட்டேன்; அன்புமணி பார்த்துக் கொள்வார்' என ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்திக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
'செப்., 1 முதல் தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12 :00 வரையிலும் , மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 வரையிலும் பார்வையாளர்கள் சந்திக்கலாம் என்றும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
