தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கலகலக்கும் ராமதாஸ் அணி; புதுச்சேரி நிர்வாகிகள் நீக்கம்

கலகலக்கும் ராமதாஸ் அணி; புதுச்சேரி நிர்வாகிகள் நீக்கம்

கலகலக்கும் ராமதாஸ் அணி; புதுச்சேரி நிர்வாகிகள் நீக்கம்


ADDED : ஏப் 03, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட ஐந்து நிர்வாகிகள், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலர் ஜனார்த்தனம், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலர் பப்லுா, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலர் ஜெகன், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட அமைப்பு செயலர் கிருஷ்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற முக்கிய கூட்டணியில் இடம்பெறாமல், சசிகலா புதிதாக துவங்கியுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார்.

இதனால், ராமதாஸ் பக்கம் இருந்து நிர்வாகிகள், வேறு கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், காங்கிரசில் இணைந்து விட்டார்.

புதுச்சேரி மாநில பா.ம.க., அமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர், சமீபத்தில் அன்புமணியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், ராமதாஸ் அணி கலகலத்து வருகிறது. அதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us