புதிய பஸ் நிலையங்களுக்கு மன்னர்கள் பெயர் ராமதாஸ் விருப்பம்
புதிய பஸ் நிலையங்களுக்கு மன்னர்கள் பெயர் ராமதாஸ் விருப்பம்
ADDED : டிச 20, 2025 07:00 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக அரசு சார்பில், பல நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த, வரலாற்றில் இடம் பெற்ற மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் பெயரை, தர்மபுரி புதிய பஸ் நிலையத்திற்கும்; திண்டிவனத்தை சங்க காலத்தில் அரசாட்சி செய்த ஓய்மான் நல்லியக்கோடன் பெயரை, திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கும்; மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு, சுதந்திரப் போராட்ட வீரர் நாகப்ப படையாட்சியார் பெயரையும் சூட்ட வேண்டும்.
உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் பஸ் நிலையங்களுக்கு, அந்த பகுதி மன்னர்கள் பெயர் சூட்ட வேண்டும்.
வட மாவட்டங்களின் மன்னர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தமிழக அரசு சிறப்பு செய்யாமல் இருப்பதும், அவர்களின் பெயர்களை மறைப்பதும் வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

