பேச்சுவார்த்தைக்காக இலங்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் பயணம்
பேச்சுவார்த்தைக்காக இலங்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் பயணம்
ADDED : மார் 25, 2025 12:18 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் முதல் நாகை வரை உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கின்றனர். இக்கடல் பகுதியில் இலங்கை மன்னார், நெடுந்தீவு, இரண தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர்.
இதனால் இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இச்சூழலில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதில் 90 சதவீதம் ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு தீர்வு காணவும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கவும் அந்நாட்டு மீனவரிடம் பேச்சுவார்த்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் சேசு, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், செரோமிஸ் இன்று கொழும்பு செல்கின்றனர்.
பின் மன்னார், யாழ்ப்பாணம் மீனவர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஏப்., 5ல் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ள நிலையில் முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை செல்கின்றனர்.