UPDATED : மார் 31, 2025 11:35 AM
ADDED : மார் 31, 2025 08:54 AM

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 31) ரம்ஜான் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.
விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். இடம்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம்.
கோவை கரும்பு கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடியில் சிறப்பு தொழுகை நடந்தது.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஈக்தா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை அரசரடி ஈத்கா மைதானத்தில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட குழந்தைகள்.
சிவகங்கை ஈஸ்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.