சிறுமிகள் பலாத்காரம்:15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி
சிறுமிகள் பலாத்காரம்:15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி
UPDATED : ஜூலை 16, 2024 01:59 PM
ADDED : ஜூலை 16, 2024 01:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
2019 ம் ஆண்டு திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரபா, ரவிக்குமார், துரைராஜ், அருண், மகேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ‛‛ கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளி என அறிவித்து, அனைவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது'' என தீர்ப்பு அளித்தார்.