தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மருத்துவமனையில் எலிக்கடி: இழப்பீடு கோரி வழக்கு 

 மருத்துவமனையில் எலிக்கடி: இழப்பீடு கோரி வழக்கு 

 மருத்துவமனையில் எலிக்கடி: இழப்பீடு கோரி வழக்கு 


ADDED : செப் 22, 2026 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் எலிக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி ஜெயஸ்ரீ தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி பொன்மலைப்பட்டி தமிழ்க்கொடி. இவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்து பொது வார்டில் இருந்தார். ஜூலை 21 ல் இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது அவரது இடது காலின் பெருவிரலில் எலி கடித்தது.

இது எதிர்பாராத ஒன்று அல்ல. சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே வார்டில் எலிகள் நடமாட்டம், எலித்தொல்லை குறித்து தமிழ்க்கொடியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் நோயாளிகளை பாதுகாப்பதில் குறைபாடு நிலவுகிறது. பாதிக்கப்பட்ட தமிழ்க்கொடிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீ திபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: திருச்சி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவமனையில் ஆய்வு செய்ய வேண்டும். எலிக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காயத்தின் தன்மைக்கேற்ப இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து அக்.15 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us