ADDED : ஜன 11, 2024 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக அவை, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.
பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகளில் தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது. இதனால், நாளை ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாகவும்; அதற்கு ஈடாக,16ம் தேதி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

